பயங்கரவாத தடைச் சட்டத்தில் புதிய விதிமுறைகள் அறிமுகம்.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27 ஆவது பிரிவின் கீழ் நான்கு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த விதிமுறைகளின் ஊடாக சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
இதனைத் தவிர தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடனம் செயய்ப்பட்டமை மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தை தடைசெய்வதற்கான தீர்மானம் என்பன தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கால சட்டத்தை நீக்கியுள்ளமையினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இந்த புதிய ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அவசர கால சட்டத்தை ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தில் வாக்களிப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும். இந்த சட்டத்தை ஒரு தடவை நிறைவேற்றினால் போதும். அது தொடர்ந்தும் வலுவுள்ளதாக இருக்கும்.
0 comments :
Post a Comment