கையடக்கத் தொலைபேசிகள் கடத்தி வந்த இருவர் விமான நிலையத்தில் இன்று கைது.
பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் உட்பட ஏனைய சாதனங்களை துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கையர் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணியளவில் தரையிறங்கிய யூ.எல்-228 என்ற விமானம் மூலமே மேற்படி உபகரணங்களை கடத்தி வந்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடரந்து மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை, 759 கையடக்கத் தொலைபேசிகள் இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கை நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment