தேர்தல் சட்ட விதிகளை மீறிய தேர்தல் காரியாலயங்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அந்தக் கட்சியில் இணைந்து கொண்ட அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பெரும் தாக்கம் எற்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தின்படி ஒரு உள்ளுராட்சி சபையில் தொகுதி அமைப்பாளருக்கு மட்டும் ஒரு பிரதான தேர்தல் காரியாலயத்தை திறக்க முடியம். அத்துடன் போட்டியிடும் வேட்பாளருக்கு மட்டும் தலா ஒரு தேர்தல் காரியாலயத்தை திறக்க முடியும்.
ஆனால் இது வரையில் ஒவ்வொரு அமைச்சரின் சார்பிலும் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களிகன் சார்பில் தனித்தனியாக பிரதான காரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தேர்தல் சட்டத்திட்டங்கள் மீறப்பட்டுள்ளன.
கொலன்னாவ, நீர்கொழும்பு, குருணாகல, அனுராதபுரம், காலி ஆகிய நகர சபைகளில் இந்த நிலை மோசமான காணப்படுவதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment