மலேசியப் பத்திரிகையாளர் சோமாலியாவில் சுட்டுக் கொலை
சோமாலியத் தலைநகர் மொகாடிஷுவில் ஆப்பிரிக்க ஒன்றிய படைவீரர்களுக்கும் துப்பாக்கிக்காரர் களுக்கும் இடையில் நடந்த சண்டையில் மலேசியப் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை நடந்த அந்த சண்டையில் மலேசியாவைச் சேர்ந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். ஆப்பிரிக்க ஒன்றிய ஆதரவு பெற்ற பாதுகாப்பு அதிகாரி அபுகரீம் அலி இந்த விவரத்தைத் தெரிவித்ததாக செய்தி நிறுவனத் தகவல்கள் கூறின.
உலகில் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றான மொஹாடிஷுவில் ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக வெளி நாட்டினர்களை வேலைக்கு அமர்த்தும் தனிப்பட்ட ராணுவப் படையினருடன் அந்தப் பத்திரிகையாளர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்கானதாக திரு அலி கூறினார்.
மொஹாடிஷுவின் கே4 பகுதியில் அந்தச் சம்பவம் நடந்ததாக அவர் சொன்னார். என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அந்தச் சம்பவம் குறித்த விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சோமாலியாவில் கொல்லப்பட்ட மலேசியர் நோராம்பைசுல் முகம்மது நோர் என அடை யாளம் காணப்பட்டுள்ளதாக பெர்னாமா தொலைக்காட்சி தகவல் கூறியது. திருமணமான அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். காயமடைந்த பத்திரிகையாளரான அஜி சாரேகார் மஸ்லான் மலேசிய உதவி நிறுவனம் ஒன்றுடன் மொஹா டிஷுவுக்கு ஒரு வாரப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்றும் பெர்னாமா தெரிவித்தது.
அவர்கள் இருவரும் மொஹாடிஷுவிலிருந்து புறப்பட்டு நேற்று தாயகம் திரும்பியிருக்க வேண்டியது. மொஹா டிஷுவில் செயல்படும் சோமாலியாவுக்கான ஆப்பிரிக்க ஒன்றியக் குழுவுடன் தொடர்பு கொள்வதற்காக மேற் கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை என்று கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நாடு சோமாலியா. அங்கு வசிக்கும் மக்களில் பாதிப்பேர் பசி பட்டினி யால் வாடுவதால் அனைத்துலக நாடுகளின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். அந்த நாட்டில் பல பகுதிகள் பஞ்சம் ஏற்பட்டுள்ள பகுதிகளாக ஐநா அறிவித் துள்ளது. இத்தகைய சூழலில் சோமாலியாவில் போட்டிப் படையினருக்கு இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது. மேற்கத்திய ஆதரவு பெற்ற அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அல்-காய் தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக் காரர்கள் போராடி வருவதால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறின.
0 comments :
Post a Comment