திஸ்ஸ அத்தநாயக்கவைக் கொலை செய்யச் சதி
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமான திஸ்ஸ அத்தநாயக்கவை படுகொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று தொடர்பில் அவரது பிரதம பாதுகாப்பு அதிகாரி கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை தொடர்பில் இன்று கொழும்பு பிரதம நீதிமன்ற நீதிவான் ரஷ்மி சிங்கப்புலியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. திஸ்ஸ அத்தநாயக்கவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான விஜிதகுமார ஜயசிங்க இது தொடர்பில் கறுவாத்தோட்ட பொலிஸாருக்குச் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது,
கடந்த மூன்றாம் திகதி பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவின் தொலைNபுசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் தொடர்பு கொள்ள முடியாது எனவும் பத்து நிமிடங்கள் தாமதமாக அழைப்பினை எடுக்குமாறும் நான் கூறினேன். அதேபோன்று பத்து நிமிடங்களின் பின்னர் குறிப்பிட்ட நபரிடமிருந்து அழைப்பு மீண்டும் வந்தது. நான் கைத்தொலைபேசியை திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வழங்கினேன்.
அதன் பின்னர் அழைப்புக்கு பதில் வழங்கிய திஸ்ஸ அத்தநாயக்கää குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியவர் தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டம் பற்றிய தகவலைக் கூறினார் என திஸ்ஸ அத்தநாயக்க தன்னிடம் தெரிவித்தார். உன திஸ்ஸவின் பாதுகாப்பு அதிகாரி தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட தொலைபேசி அழைப்புத் தொடர்பான தகவல்களை குறித்த தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள தற்போது கறுவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதம நீதிமன்ற நீதிவானின் அனுமதியைப் பெறவுள்ளனர்.
1 comments :
Harm or violence threatning behaviour poses a major threat to our society and real democracy
Post a Comment