தருஷ்மன் அறிக்கையினை பேரவையில் ஆராய்வதற்கு இடமளிக்க மாட்டோம். சமரசிங்க
தருஷ்மன் அறிக்கை நடைமுறைகளுக்கு முரணாண வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு சமர்பிக்கப்படுள்ள நிலையில் பேரவையில் அந்த அறிக்கையினை ஆராய்வதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் இது தொடர்பில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தி உள்ளோம். பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் எமக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் தூதுவருமான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் தருஷ்மன் அறிக்கையினை மனித உரிமைப்பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு பான்.கீ மூன் தருஷ்மன் அறிக்கையினை மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்தமை பேரவையின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்று இலங்கை தூதுக்குழுவினர் தெரிவித்ததுடன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையையும் சந்தித்து பேச்சு நடத்தினர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி முடிவடையவுள்ளது. அதாவது எந்தவொரு விடயத்தையும் சட்டவிரோதமாகவும் நடைமுறைக்கு அப்பாற்பட்டும் செய்தால் அது வெற்றி பெறாது என்பதனை நாங்கள் நிருபித்துள்ளோம். தருஷ்மன் அறிக்கைகையை பேரவையின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டே கொண்டு வந்தனர் என்றார்
0 comments :
Post a Comment