Sunday, September 4, 2011

காத்தான்குடியில் தொடரும் பெருநாள் கொண்டாட்டங்கள்..

முஸ்லிம்களின் பிரதானமான நோன்புப் பெருநாள் கொன்டாடங்கள் இம் முறை நாட்டில் பல பாகங்களிளும் மிகவும் அமைதியாகவும், நிம்மதியாகவும் கொன்டாடப்பட்டன அதிலும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

பெருநாள் தினத்தை முன்னிட்டு ஸிராயா தீவு புனரமைக்கப்பட்டு அங்கு விஷேட படகுச்சாவரி இடம்பெறுவதோடு சிறுவர்களுக்கான பெருநாள் பாஷார் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

பெருநாள் ஐந்தாவது தினமான இன்று கடற்கரை மற்றும் பிரதான வீதிகளில் மக்கள் நிரம்பி இருந்தனர். குறிபிட்ட சில இடங்களில் வாகன நெரிசலைக் காணக்கூடியதாக இருந்தன.

பெரியவர் சிறியவர் இளைஞர்கள் என அனைவர் முகத்திலும் உள்ளத்திலும் சந்தோஷம் அதிகமாக கானப்பட்டன..

அது மாத்திரமின்றி இந்து சகோதரர்களும் இனைந்து ஒற்றுமையாக தங்களது சகோதரத்துவத்தை வெளிக்காட்டினார்கள்.

தற்போது அரபு நாடுகளைப்போன்று பேரீத்தம்மரம் நடப்பட்டுள்ளது. பார்பதற்கு இன்பச்சோலைப் போன்று காட்ச்சியளிக்கிறது காத்தான்குடி பிரசேதசம்.


காத்தான்குடியிலிருந்து ஜூனைட்





No comments:

Post a Comment