தமிழர் ஒருவர் முதல்வராக இருந்ததை நினைவு கூருகின்றார். சஜித் மோகன்
தமிழ் மகன் ஒருவன் மாநகர சபையின் முதல்வராக இருந்த பெருமை நீர்கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு உண்டு- வேட்பாளர் சஜித் மோகன்
கடந்த காலத்தில் தமிழ் மகன் ஒருவன் நீர்கொழும்பு மாநகர சபையின் முதல்வராக இருந்த பெருமை நீர்கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு உண்டு. அந்த வரிசையில் பல தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு சேவை செய்துள்ளனர். ஆனால் 2006 ஆம் ஆண்டு மாநகர சபைக்கு நான் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் 19 வருட காலமாக ஒருவரும் தெரிவு செய்யப்படவில்லை என்று நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சஜித் மோகன் தெரிவித்தார்.
நீர்கொழும்பு செர்ரி லேன்ட் ஹோட்டலில் இடம் பெற்ற பிரசாரக் கூட்த்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, டாக்டர் ஜயலத் ஜயவர்தன உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வேட்பாளர் சஜித் மோகன் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, கடந்த தேர்தலின் போது ஐந்தாவது இடத்திற்கு வந்தேன் வேறுபாடுகளை மறந்து ஒருமித்து வாக்களித்தால் இந்த முறை இரண்டாவது இடத்திற்கு வந்து பிரதி மேயராக வரக் கூடிய வாய்ப்பு உள்ளது.நான் மாநகர சபையின் எதிர் கட்சி ஆசனத்திலிருந்தாலும் பணத்திற்கு விலை போகவில்லை என்பதை என்பதையும் ஆளும் கட்சி உறுப்பினரை விட அதிகமான சேவைகளை செய்துள்ளேன் என்பதையும் எல்லோரும் அறிவர் என்றார்.
செய்தியாளர் :- எம் , இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment