ஐ.நா நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு செல்லுமா?
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை எதிர்வரும் 12 தொடர்க்கம் 19 வரை இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பிவைக்க தீர்மானிப்பட்டுள்ளதாக சில ஊர்ஜிதமற்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட அறிக்கையானது ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு அறிவுறுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நா விற்கு அப்பாற்பட்ட பொது நபர்களினால் தயாரிக்கப்பட்ட உள்ளக செயற்பாடுகளுக்கானது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதை மனித உரிமை பேரவைக்கு அனுப்புவதா இல்லையா என்ற தர்மசங்கடத்தில் ஐ.நா உள்ளதாக அறியமுடிகின்றது.
அதேநேரம் நிபுணர் குழு அறிக்கை நம்பகத்தன்மை அற்றது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜெர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெள்ளையோ, கறுப்போ அல்லது வேறும் ஏதேனும் நிறத்திலான கொடியையோ ஏந்தி சரணடைய வரும் எவரையும் படையினர் கொல்லவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டு மக்கள் என்ற ரீதியில் சரணடைய விரும்பும் அனைவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படும் எனவும், வெளிநாட்டவர்களைப் போன்று நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 600 சிறுவர் போராளிகள் உள்ளிட்ட 11000 பேர் சரணடைந்ததன் மூலம் இதனைப் புரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது இலங்கைக்கு அதிக அழுத்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் இலங்கைக்கு தனது பூரல ஆதரவை சீனா என்றும் வழங்கும் என தெரிவித்துள்ளது
கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் இன்று காலை ஜெனீவாக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment