காத்தான்குடியிலிருந்து ஸிரயா தீவிற்கு படகுச் சேவை ஆரம்பம்...
காத்தான்குடி நகரசபையால் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு வாவியினுள் அமைந்துள்ள ஸிரயா தீவுக்கான படகுச்சேவை பெருநாள் தினத்தன்று பிற்பகல் 3 மணியளவில் காத்தான்குடி கொமைனி வீதியில் அமைந்துள்ள பஞ்சகர்ம வைத்தியசாலையின் முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் K.L.M.பரீத்.. தவிசாளர் S.H.M..அஸ்பர் நகரசபை உறுப்பினர்களான H.M.M..பாகிர் அலி சப்ரி ஆகியோரும் கலந்து கொன்டனர். பிரதியமைச்சர் ஸிரயா தீவை பார்வையிடுவதையும்.. கப்பலில் பிரயாணம் செய்வதையும் படங்களில் காணலாம்.
செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்
0 comments :
Post a Comment