ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்
இந்தியாவின் புதிய ஆலோசனை
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று மிக அவசியம் என்றும் ஐக்கிய இலங்கைக்குள் சகல தரப்பினருக்கும் சமமான வகையில் உரிமைகள் கிடைக்கும் வகையிலான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்டத் தலைவர் முரளி மனோகர் ஜோசி தெரிவித்துள்ளார்.
அனகாரிக தர்மபாலவின் ஜனன தின நினைவையிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்த முரளி மனோகர் ஜோசி இவ்வாறு தெரிவித்ததாக இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்டத் தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலரை சந்தித்துள்ளதுடன் நிலையான அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொள்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கf வேண்டும் என்று அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment