Friday, September 23, 2011

பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை தொடர்ந்தும் செயற்படும்- மஹிந்த ராஜபக்ஷ!

பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை தொடர்ந்தும் செயற்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடும்போக்குவாதம், தீவிரவாதம் போன்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிய பிராந்திய மக்களின் பாதுகாப்பபை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்தின் போது, இலங்கைக்கு சாதகமாக பல தீர்மானங்களை எடுக்க முடிந்ததாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பல அரச தலைவர்களை சந்தித்து, இலங்கை தொடர்பாக பரப்பபட்டிருந்த தவறான பிரசாரங்களை முறியடிக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விரைவில் வெளியிட போவதாக ஜனாதிபதி சர்வதேச தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவது தொடர்பாகவும் ஜனாதிபதி வெளிநாட்டு தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் பீரிஸ் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com