தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சட்டத்தரணி கடத்தல்.
கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சட்டத்தரணி ஒருவர் இன்று (7)அதிகாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர். பெலவத்தை , பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த கஸ்த்தூரி ஆராச்சி என்ற 58 வயதுடைய சட்டத்தரணி ஒருவரே கடத்திச் செல்லப்பட்டவராவார்.
கடத்திச் செல்லப்பட்ட சட்டத்தரணி கடந்த 3 ஆம் திகதி அவரது மனைவி மற்றும் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில்ஏழு பேரை கொண்ட குழுவினர் சட்டத்தரணியின் பாதுகாவலர்கள் இருவரை தாக்கிவிட்டு சட்டத்தரணியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment