எந்தவொரு கட்சியுடனும் ஜே.வி.பி. கூட்டுச் சேராது - விஜித்த ஹேரத்
எமது நாடு குட்டிச்சவராவதற்கும் இன்றைய நிலை வரையான சிக்கலுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமே பொறுப்புக் கூற வேண்டும். இந்த இரு கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்துவதற்கு சாத்தியமே இல்லை என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
ஜே.வி.பி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து அரசாங்கத்தை தோற்கடிக்கும் முயற்சிகளுக்கு தயாராவதாக வெளியான தகவல் தொடர்பாக தெளிவுபடுத்துகையிலேயே பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடந்து கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது, ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமே இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. இந்த இரு கட்சிகளினதும் முறையற்ற ஆட்சியும் வழிநடத்தல்களுமே யுத்தம் உருவாவதற்கும் மனித உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அழிவதற்கும் காரணங்களாக அமைந்தன. மூவின மக்களை கொண்ட இந்த நாட்டில் இரு தரப்பினருமே நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. எமது நாடு குட்டிச்சுவராவதற்கும் இன்றைய நிலை வரையான சிக்கலுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமே பொறுப்புக் கூறவேண்டும்.
ஜே.வி.பி. தனது கட்சிக் கொள்கையுடனேயே என்றும் செயற்படுகிறது. எமது கட்சி எப்போதும் மக்களின் பக்கமே சார்ந்து செயற்படுகிறது.
0 comments :
Post a Comment