உலகப் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது: உலக வங்கி எச்சரிக்கை
உலகப் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப்-பும் எச்சரித்துள்ளது. உலக பொருளாதார சவால்களை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கான மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது.
சுமார் 10,000 கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பேசிய உலக வங்கி தலைவர் ராபர்ட் சியோலிக் மற்றும் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் ஆகிய இருவருமே இந்த எச்சரிக்கையை விடுத்தனர்.
உலகப் பொருளாதாரம் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், அதை மீட்க குறுகிய பாதையே உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
"உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படாது என்றே நான் இன்னும் நினைக்கிறேன். ஆனால் தினமும் வரும் பொருளாதார சிரமங்கள் குறித்த செய்தி அந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு உலக நெருக்கடிக்கு முன்பாக ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா உடனடியாக அவர்களது நிதி சிக்கல்களை சமாளிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் உள்ள நெருக்கடி வளரும் நாடுகளையும் பாதிக்கும்" என்று சியோலிக் குறிப்பிட்டார்.
ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் பேசுகையில், பொருளாதார மீட்சி பாதை என்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது விட தற்போது குறுகியதாக உள்ளது என்றார்.
...............................
0 comments :
Post a Comment