எமது நாட்டு வீதிகளில் நிமிடத்திற்கு புதிதாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள்
எமது நாட்டில் ஒவ்வொரு நிமிடமும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் புதிதாக வீதிக்கு வருவதாக மோட்டார் வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 148 மோட்டார் சைக்கிள்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி மாதத்திற்கு கிட்டத்தட்ட 20525 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனடிப்டையில் ஒரு தினத்திற்கு 933 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினத்திற்கு வேலை செய்யும் நேரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒரு மணித்தியாலத்திற்கு 117 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்படுகின்றன எனவும் அது கிட்டத்தட்ட நிமிடத்திற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்ற எண்ணிக்கையில் இருப்பதாகவும் மோட்டார் வாகனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment