திருமலை மக்கள் எதிர்நோக்கும் தொடர் பிரயாண அசௌகரியங்கள்.
கடந்த 9 மாத காலமாக தொடரும் மூதூர் திருகோணமலைக்கு இடையான படகு சேவை நிறுத்தம் காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். தற்போது மக்கள் தரை மார்க்கமாகவே பிரயாணம் செய்து வருகின்றனர். பாதை செப்பனிடப்பட்டுக் கொண்டிருப்பதனாலும் மிதக்கும் பெரிக்களுக்காக (மிதக்கும் பாதை) மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதனாலும் திருகோணமலை மாவட்ட வைத்தி;யசாலைக்கு செல்லும் நோயாளர்கள் கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படுகின்றது.
யுத்த காலத்தில் கூட சில நிமிடங்களாக காணப்பட்ட இந்த பிரயாணம் யுத்தத்திற்கு பின்னர் பல மணி நேரங்களாக மாறியிருப்பது கவலைக்குரிய விடயமாகும். திருகோணமலை மூதூரிற்கு இடையான படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தமது பிரயாணம் இலகுவாக்கி வைக்கப்படும் என எதிர் பார்த்துக்காத்திருக்கின்றனர்.
0 comments :
Post a Comment