யுவதியை வல்லறவு புரிந்து நிர்வாணப் படமெடுத்த கிராம சேவகர் கைது
20 வயது யுவதியை பாலியல் வல்லுறவுப் புரிந்து நிர்வாணப் படங்களை எடுத்தச் சம்பவம் தொடர்பாக கிராமசேவகர் ஒருவர் கல்நெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகளின் தந்தையான 30 வயது நபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
பாதிக்கப்பட்ட யுவதியின் சகோதரர் கிராம சேவகரின் நண்பராவார். ஒரு வாரத்திற்கு முன்னர் நண்பனை பார்க்க வீட்டுக்கு கிராம சேவகர் வந்த வேளையிலேயே பாலியல் வல்லுறவும் நிர்வாணப் படங்களை எடுத்தச் சம்பவமும் இடம் பெற்றள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கிணங்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாருக்காவது தெரிவித்தால் தான் எடுத்துள்ள நிர்வாண புகைப்படங்களை பகிரங்கப்படுத்துவதாக கிராம சேவகர் யுவதியை எச்சரித்துள்ளார்.
0 comments :
Post a Comment