அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்குமாம்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முனைப்புக் காட்டி வரும் நாடுகள் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையை வைத்துக் கொள்ள முடியாது என்று இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் தெரிவித்தார்.
நியூயார்க்கில் இருவரது சந்திப்பும் சுமார் 40 நிமிடம் நடைபெற்றது. இதில் இந்தியா அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
அதேபோல் பயங்கரவாத பேச்சு வார்த்தைகளில் தாலிபானின் ஹாக்கானி அமைப்பின் பங்கு பற்றியும் எழுந்தது.
ஹக்கானி அமைப்பின் மீது பாகிஸ்தன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதற்கு நெருக்கமான ஐ.எஸ்.ஐ.யின் நடவடிக்கைகளை துண்டிக்கவேண்டும் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது.
இதனால்தான் இந்தியா, அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இந்தியா அமெரிக்காவுடன் உடன்படுகிறதா அல்லது அமெரிக்கா இந்தியாவுடன் உடன்படுகிறதா என்பது பற்றியல்ல இந்த விஷயம். பொதுவாக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்னவாக இருக்கவேண்டும் என்பதை நாடுகள் தீர்மானிக்கவேண்டும். என்றார்.
சில அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய ஆயுத ஒப்பந்தங்களை வழங்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எஸ்.எம்.கிருஷ்ணா "ராணுவ ஒப்பந்தங்கள் தகுதியின் அடிப்படையில் நிபுணர்களால் தேர்வு செய்யப்படும் ஒன்று. இதனால் நாங்கள் வேறு முடிவெடுக்கும்போது வேறொருவர் வருத்தப்படுவதில் நியாயமில்லை. இந்த ஒருவிஷயத்திற்காக இந்திய,அமெரிக்க உறவு மந்தமடைந்து விட்டதாக நினைக்கக் கூடாது" என்றார்.
0 comments :
Post a Comment