இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சீன இராணுவம் அத்துமீறல்
இந்திய எல்லைபகுதிக்குள் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்து இந்திய படையினரின் பதுங்கு குழிகள், கண்காணிப்பு முகாம்களை சேதபடுத்திவிட்டு சென்றது. இந்திய-திபெத் எல்லை கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள லே பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ளது நையோபா செக்டரர் எல்லைப்பகுதி.
இந்த எல்லையில் சீன இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து இந்திய எல்லையை கண்காணிக்கும் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய இராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ், நேற்று முன்தினம் இதே போன்று லே பகுதியின் சூமோர் என்ற இடத்தில் சீன ஹெலிகாப்டர் அனுமதியின்றி தரையிறங்கியதாக குற்றம் சாட்டினார்.
0 comments :
Post a Comment