ஜேவிபி யின் உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பல்லவாம்.
தற்போது மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக கூறுப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானதாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பிரச்சினைகள் தொடர்பாக பதிலளிப்பதற்கு தேவையோ அவசியமோ அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.
ஜே.வி.பி ஜனநாயக ரீதியில் இயங்கும் அரசியல் கட்சி என்றும், ஏற்பட்டுள்ள பிரச்சினை கட்சியின் உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள உள்ளக பிரச்சினை எனவும், அதை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்
தெரிவித்தார்.
இலங்கையில் அரசியல் கட்சிகளுக்குள் பிளவுகளை உருவாக்குவதற்கு வெளிநாட்டு சக்திகளுக்கு தேவை இருப்பதாக கருதுவது கடினம் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கதவுகள் யாருக்கும் உள்வரவோ , வெளியேறவோ திறந்தே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment