தமிழ் மக்களை ஏமாற்றிய புலிப்பினாமிகள். ஜெனிவாவில் இலங்கை விவகாரம் அவுட்
இலங்கை அரசாங்கத்தினை போர்குற்றம் என்ற சிக்கலில் மாட்டுவோம் அதற்கு தமிழ் மக்களின் உதவிவேண்டும் (அதாவது பணஉதவி) என புலிப்பினாமிகள் போடும் கோஷத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நாமம் போடப்பட்டடுள்ளது.
இவ்விடயத்தினை கொழும்பிலுள்ள வெளிநாட்டு ராஜதந்திர வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு தற்போது நடைபெற்று வரும் 18 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இல்லை என்று அவ்வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான கால எல்லையொன்று இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் நேற்று உறுதியாகத் தெரிவித்தன.
இறுதிச் சண்டை இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தாராளமாக இடம்பெற்றன என்றும் அதுகுறித்தான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த அதே சர்வதேச சமூகம் தற்போது வெளியிட்டுள்ள இச்செய்தி புலிப்பினாமிகளின் கஞ்சியில் மண்ணைத் தூவுவதாக அமைந்துள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படலாமெனவும் அதற்காக தாம் முழு மூச்சாக செயற்படுவதாகவும் புலம்பெயர் புலிகள் பூச்சாண்டி காட்டிவந்தனர்.
ஆனால் அப்படியான ஒன்று நடைபெறமாட்டாதெனத் தெரியவருகிறது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான தனது பக்க நியாயத்தை விளக்குவதற்காக இலங்கைக்கு கால அவகாசமொன்றை வழங்குவதற்கு அமெரிக்கா, இந்தியா உட்பட்ட நாடுகள் ஆலோசித்திருப்பதாகத் தெரிகிறது.
இதன்படி ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச்சில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் இலங்கை தனது நியாயத்தைத் தெளிவுபடுத்த அவகாசம் வழங்கப்படலாமெனத் தெரிகிறது.
இது குறித்து கொழும்பு வந்துள்ள அமெரிக்க உதவிச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கும் அரச தரப்பு பேச்சுகளின்போது ஆராய்ந் திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment