கார் ஓட்டியதால் கசையடி...!சவூதி பெண்ணின் சோகம்...!
பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்று மன்னர் விதித்த தடையை மீறி கார் ஓட்டிய பெண்ணுக்கு 10 கசையடிகள் வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்பு, சவூதி அரேபியாவில் பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்ட மன்னர் தடை விதித்துள்ளார்.
இருப்பினும் எனினும் இதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் முதல் சாலைகளில் பெண்கள் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
போலீஸாரும் பெண் டிரைவர்களை சாதாரணமாக தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திவிட்டு, இனிமேல் வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பிவிடுவர்.
இந்நிலையில் தற்போது தடையை மீறியதற்காக சவூதி பெண் ஒருவருக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சட்டரீதியாக தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
0 comments :
Post a Comment