காத்தான்குடிக்கழிவுகள் ஆரையம்பதி வரை.....
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்துக்குட்பட்ட செல்வா நகர் கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் இருப்பிடங்களுக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு பல எதிர்ப்பு ஆர்பட்டங்களும் ((குப்பை கொட்டும் ட்ராக்டர்களை மறித்து)) நடந்தேறி விட்ட.செல்வாநகர் கிழக்குப் பகுதியில் இவ்வாறு காத்தான்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டு, கர்பலா நகர், பாலமுனை பகுதிகளில் கொட்டபடுவதனால் இங்கு வசிக்கும் மக்கள் மக்கள் கடுமையாக பதிக்க படுகின்றனர்.
இதை பற்றி ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் கிறிஸ்டினா சாந்தன் மற்றும் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம். அஸ்வர் ஆரையம்பதிக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடும் போது இனிமேல் பட்டு குப்பைகள் கொட்டப்படுவதைவதை நிறுத்துவதாக தெரிவித்தனர். இருப்பினும் இந்த கலந்துரையாடலின் பின்னும் இரவோடு இரவாக ட்ராக்டர்களில் கொண்டுவந்து இரகசியமாக கொட்டபட்டத்தாக ஆரையம்பதி மக்கள் கூறினர்.
இதனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக குப்பைகள் கொட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்களின் முலமாக அறியக்கூடியதாய் இருந்தது.
இக் கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மண்முனைப்பற்று மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர்கள்,காத்தான்குடி நகரசபை தவிசாளர் உட்பட நகரசபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் சம்மேளன பிரதிநிதிகள் , பொலிஸ் உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலின் போது, காத்தான்குடி பிரதேசத்தில் தினமும் சேருகின்ற 40,000 கிலோ-இற்கும் மேற்பட்ட திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கான இடம் இல்லாத காரணத்தினால் மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினையை அணுகி நிரந்தரத் தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு காத்தான்குடி நகரசபை தவிசாளரினால் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதேவேளை மண்முனைப்பற்று பிரதேச எல்லைப் பிரிவுக்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளரினால் விளக்கிக் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, காத்தான்குடி பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவது தொடர்பில் சட்டங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டு மனிதாபிமானமான முறையிலேயே தீர்வுகள் எட்டப்பட வேண்டுமெனவும் தெரிவித்த முதலமைச்சர், இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நிரந்தர இடமொன்றினை பெற்றுக்கொள்ளும் வரை தற்காலிக தீர்வாக மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பகுதியிலுள்ள தாளன்குடாவிற்கும் பாலமுனைக்கும் இடைப்பட்ட பள்ளமான தனியார் காணியில் எதிர்வரும் மூன்று மாதத்திற்கு கொட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு காத்தான்குடி தவிசாளரினால் இக்குப்பைகளை கொட்டுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தினை பார்வையிடுவதற்கு மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையினை பெற்று எதிர்வரும் 19ம் திகதி நாளை இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றினை பெற்றுத்தருவதாக முதலமைச்சர் கூறியதாக காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான ர்ஆ.பாக்கீர் அவர்கள் தெரிவித்தார்.
இதைனை தொடர்ந்து, காத்தான்குடியிலும் ஒரு வீதி மறிப்பு போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் மாநகரசபை முதல்வர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்டது
இந்த போராட்டம் தொடர்பாக நகரசபை முதல்வர் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கம் காத்தான்குடி நகர சபைக்கு குப்பைகளை கொட்டுவதற்கு ஆரையம்பதியில் ஓர் இடத்தினை ஒதுக்கி தந்திருந்ததாகவும் இருந்த போதும் எமது ஊழியர்கள் குப்பைகளை கொட்டுவதற்காக சென்ற போது சிலரால் குப்பைகளை கொட்ட முடியாமல் தடைகள் ஏற்படுத்த பட்டதாகவும் தெரிவித்தார்.
எனவே அதிகமான மக்கள் வாழும் எமதூரில் குப்பைகளை கொட்டுவதற்கான இடத்தினை அரசாங்கம் தந்த போதும் தடைகளை ஏற்படுத்தப்படும் போது எமக்கு வேறு தெரிவு இல்லை என்றும் கூறினார். எனவே அரசாங்கம் முதலமைசர் தலையிட்டு இப்பிரச்சனைக்கு ஒரு அவசர தீர்வினை பெற்று தந்த பின்னரே நாம் இவ்விடத்தில் இருந்து நகருவோம் என்று மாகாண சபை உறுப்பினர் பரீத் அவர்கள் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை இப்போது மட்டும் இல்லை இது எப்போதும் தொடரகூடிய பிரச்சனை, ஆகவே இந்த திண்மக்கழிவுகளை இல்லாதொழிக்க ஏன் ஒரு நிரந்தரமான தீர்வை கொண்டுவர முடியாது. இந்த கலந்துரயடல்களும் எடுக்கப்பட்ட முடிவுகளும் ஒருபுறம் இருக்க திண்ம-கழிவு என்றவுடன், சிறுவயதில் படித்த சுற்றாடல் கல்வி இதில் சுழல் மாசடைதலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பது ஜாபகம் வருகிறது. இது சம்மந்தமாக சிந்திப்பதை விடுத்து, ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கும் உதவாத கலந்துரையாடல்கள் என்று நேரத்தை வீணடிப்பதனால் மக்களின் நேரம் மற்றும் அவர்களின் தொழில்கள் பாதிக்கப்படுமே தவிர ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க போவதில்லை என்பது கண்கூடு.
புதிய தொழிநுட்ப-வளர்ச்சியால் எவ்வளவோ சாதிக்கும் இந்த உலகில் ஒரு சாதாரண குப்பை கொட்டும் விவாகரத்துக்கு ஆர்ப்பாட்டம். வெளி உலகம் அறிந்தால் இதை பற்றி சிரிப்பர்களே தவிர வேறொன்றும் செய்யமாட்டார்கள்.. இதில் இவளவு காலமும் பதிக்க பட்டமக்களையும் பற்றி நான் சற்று சிந்திக்கவேண்டும் .. எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்..
இக்கட்டுரை முலமாக அங்குள்ள அரசியல் காய்களுக்கு இத்தால் தெரிவிக்க முனைவது என்னவென்றால் WASTE MANAGEMENT என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் திண்மகழிவுகளை MANAGE பண்ணுவதற்கான ஒரு வழிமுறை. இதை பற்றி அறியவேண்டுமாயின் கூகிள் முலம் அறியலாம், எனக்கு தெரிந்து இந்த SOLID WASTE MANAGEMENT இல், ஒன்பது முறைகளின் முலம் இந்த திண்ம கழிவுகளுக்கு ஒரு முடிவுக்கு கொண்டுவரலாம். இதில் நாட்டுக்கும் வீட்டுக்கும் பொருத்தமான ஒரு வழிமுறையை கையாழ்வதன் முலமாக நமது மட்டக்களப்பு மக்களை நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முடியும். இத்திட்டமானது காத்தான்குடி குப்பைகளுக்கு மட்டுமல்லாது மட்டக்களப்பு மாநகரத்தில் நாளாந்தம் சேர்கின்ற குப்பைகளுக்களை எல்லாம் இந்த முறைமுலம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்..
ஆகவே நாளை நடைபெற இருக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், நியமிக்க பட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலான உயர்மட்டக்குழு என்ன சொல்ல போகிறது என்பதை சற்று பொறுத்துதான் பார்ப்போமே !!! தொடரும்...
கோகுலன் , ஜீனைட்.எம்.பஹத்
0 comments :
Post a Comment