பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக நபர் பலி
கொழும்பு கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்றிரவு (7-9-2011) பாதாள உலகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மரணமாகியுள்ளார்.
நேற்றிரவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட பாதாள உலக நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதனை அடுத்து பொலிஸார் திருப்பிச் சுட்டபோது அந்த நபர் மரணமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
கொல்லப்பட்ட நபருடன் உடன் இருந்த இரு சந்தேக நபர்கள் சம்பவத்தை அடுத்த தப்பிச் சென்றுள்ளதாகவும், ரி 56 ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தப்பிச் சென்ற நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment