கொள்ளயர்களின் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் காண்டபிள் காயம்.
குருநாகல் நகரில் பிரதான வீதியில் பிரதான பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலின் முன்னால் அமைந்துள்ள வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் கடையினை கொள்ளையிட வந்தவர்களின் கைத்துப்பாக்கிக்கு இலக்காகி குருநாகல் பொலிஸ் நிலையக் கான்ஸ்டபில் ஒருவர் படுகாயத்திற்குள்ளாகி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இன்று காலை 9. 15 மணி அளவில் பல்சர் மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் வியாபாரத் தலத்தினுள் நுழைந்து அதற்குள் உள்ள இரும்புக் கம்பி கதவை தள்ளிக் கொண்டு நுழைய முயற்சி செய்த போது விபாயார நிலையத்தின் உரிமையாளருக்கும் திருடர்களுக்குமிடையே சண்டை நடைபெற்ற போது கைத்து துப்பாக்கி வெடிச் சப்த்ததைக் கேட்டு அவ்விடம் சென்ற பொலிஸாரை சுட்டு விட்டு திரும்பி தப்பிச் சென்று விட்டனர்.
அத்துடன் திருடர்ககளின் துப்பாக்கி சூட்டுக் வியாபார நிலையத்தின் உரிமையாளர் சிறு காயத்திற்கு இலக்காகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இது குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.
அம்மார் குருநாகல்
0 comments :
Post a Comment