Saturday, September 17, 2011

படிக்கட்டில் ஏறினால் வரும் மின்சாரம்

படிக்கட்டில் ஏறும்போது மின்சாரம் தயாரிக்கும் கருவியை ஏழாம் வகுப்பை சேர்ந்த மாணவனொருவன் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான். திருப்புhர் மாவட்டம் தாராபுரம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. சுமார் 141 பள்ளிகளில் இருந்து 212 மாணவர்கள் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் அகிலன் என்ற மாணவன் பெரும் சாதனையொன்றையே நிகழ்த்தினான்.

இம்மாணவன் படிக்கட்டில் ஏறும் போது மின்சாரம் தயாரிக்கும் கருவியை உருவாக்கி வைத்திருந்தான். சிறிது சாய்தளமாக உள்ள படிக்கட்டில் மிதித்தால் அதன் அழுத்தத்தில் கீழே சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ள வில் சுழல்கிறது. அதனுடன் இணைக்கப்பட்ட டைனமோவில் மின்சாரம் உற்பத்தியாகி மின்குமிழ் எரிகிறது.

இதுபற்றி அகிலன் கூறியதாவது, சைக்கிள் சக்கர சுழற்ச்சியால் உற்பத்தியாகும் மின்சார முறைதான் இதுவும் நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது அடிக்கடி மின்தடையால் அவதிப்பட்டேன் இதற்கு தீர்வுகாண இருட்டில் இருந்து யோசித்தபோதுதான் இந்த யோசனை கிடைத்தது.

தினசரி ஏராளமானோர் படிக்கட்டுக்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மலைக்கோயில்களில் ஏராளமான பக்தர்கள் ஏறி இறங்குகின்றனர் படிக்கட்டு மிதிபட்டுக்கொண்டே இருக்கின்றது இதுபோன்ற இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தினால் அந்தந்த பகுதி மின்தேவையை நிவர்த்தி செய்யலாம் என்றான்.

No comments:

Post a Comment