எதிரி தொடர்பாக மனித உரிமைக்குழுவிடம் முறையிட்டு நீதிகேட்கும் இளைஞன்.
இலங்கைநெட் நிர்வாகத்தினருக்கு, நான் அனுப்பும் இந்த உண்மையான விடயத்தை பிரசுரித்து, மனித உரிமை குழுவிடமும் முறையிடவும்.
பாலேந்திரன் துஷாந்தன் ஆகிய நான், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த முன்னாள் போராளி. தற்போது எனது வயது முப்பது. வன்னி யுத்தத்தில் உச்சந்தலையில் காயமடைந்த நான், எனது தலையில் இருந்த காயம் தொடர்ந்தும் சுகமாகாமல் இருந்ததால் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து சமாதான காலப்பகுதியில் விலத்தி, எனது சொந்த இடமாகிய திருகோணமலைக்கு வந்து, எனது தாயாருடன் உதவியுடன் கொழும்பு பெரியாஸ்பத்திரியில், நான்கு தடவை எனது தலையில் சத்திரசிகிச்சை செய்தேன்.
எனது தலையில் சிறிது மண்டை ஓடு இல்லாததால் தினமும் வேதனை. அதனால் தொடர்ந்தும் குளிசை பாவித்தபடி இருக்கிறேன். இதனால் எனது தாயாருக்கு மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. அதனால் பிரச்சனை அதிகரிக்கவே, கிளிநொச்சியில் இருந்த எனது தம்பியுடன் சில காலம் சென்று இருந்தேன். அதன் பின்னர் திருகோணமலை இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன், மூன்று வருடம் எனது சிகிச்சையை தொடர்ந்தேன்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்தேன். கொழும்பு " கிளினிக்" ல் என்னை பார்க்கும் வைத்தியர் இரண்டு கிழமைக்கு ஒருதடவை கிளினிக்கிட்கு வரும்படி சொன்னார். அதாவது மாதத்தில் இரண்டு தடவை கொழும்புக்கு கிளினிக்கிட்கு போகவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனால் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் இருந்தது. எனக்கு உதவியாக இருந்த எனது தம்பியும் சரணடைந்து கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், எனது தாயாரினாலும் எனக்கு உதவ முடியாமல் இருந்தது. எனவே சத்திரசிகிச்சையை செய்து எனது தலையில் இருக்கும் காயத்தை மாற்றினால், மருத்துவ செலவுகளை குறைக்கலாம் என நினைத்து, வெளிநாடொன்றில் இருந்து செயற்படும் எதிரி இணையத்தள நிர்வாகியிடம், எனது கஷ்டத்தை சொல்லி எனது ஆவணங்களையும் அனுப்பினேன். அதன் பின்னர் வன்னிமைந்தன் என அழைக்கப்படும் எதிரி இணையத்தள நிர்வாகியிடம் Skype மூலம் நானும் எனது தாயாரும் 2011/08/26 அன்று புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் உறவுகளிடம் மருத்துவ உதவி கோரி பேட்டி கொடுத்தோம். பத்து நாட்களில் எனது உதவி கோரும் காணொளியை நீக்குவதாக கூறிய எதிரி நிர்வாகி, அதன் பின்னர் நான் அவருக்கு அனுப்பிய, எனது இயக்க விபரங்களை வைத்து தேவையில்லாமல் ஆராய தொடங்கினார். இவர் தேவையில்லாமல் கேட்ட கேள்விகள் வெறும் இவரின் கற்பனைகளாகவே இருந்தது. இவரின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்காததால், இவர் எனது இயக்க ஆவணங்களை வேறு இணையத்தளங்களில் பிரசுரிக்கப்போவதாக மிரட்டினார். அதற்கு நான் வடமாகான வேசிக்கு பிறந்த நீ, வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு என்னை வெருட்டுகிறாயா? நான் உனது வெருட்டலுக்கு பயப்படமாட்டேன் என பதில் அனுப்பியிருந்தேன்.
அதனால், எதிரி இணையத்தள நிர்வாகி, தனது இணையத்தில் இருந்து எனது காணொளியை நீக்காமல். அதில் PLS DONT HELP ANY MORE HIM என Type செய்துள்ளார். அத்துடன் கடந்த கிழமை (2011/09/19) அன்று கிளிநொச்சியில் எனது நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது எனது கைத்தொலைபேசிக்கு தொடர்பெடுத்த எதிரி நிர்வாகி, என்னுடன் கதைத்துவிட்டு தந்திரமாக, எனது நண்பனின் தாயாரிடம் தொலைபேசியை கொடுக்க சொன்னார். நான் வஞ்சகமில்லாமல் எனது நண்பனின் தாயாரிடம் எனது கை தொலைபேசியை கொடுத்தேன். எதிரி நிர்வாகி எனது நண்பனின் தாயாரிடம் இவன் கருணா குழுவை சேர்ந்தவன். இவன் வெளிநாட்டு தமிழர்களிடம் தான் போரினால் பாதிக்கப்பட்டவன் என கூறி, இலட்சக்கணக்கில் கொள்ளை அடித்துவிட்டான். இவனை வீட்டுக்கு எடுக்காதீர்கள் என கூறினார். அதைகேட்ட எனது நண்பனின் தாயார் பயத்தில் தனது மகனிடம் கூறினார். இந்த விடயத்தை எனது நண்பன் என்னிடம் கேட்டு ஆச்சரியப்பட்டான். இப்படியாக எதிரி நிர்வாகி தன்னை வல்லவன் என நினைத்து, வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு பொய் கதைகளை பரப்பி, என்னை கேவலப்படுத்த முனைகிறார். இந்த பொய்காரனுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்தான் நல்ல பாடம் புகட்டவேண்டும்.
வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தனது இடது காலை இழந்த பெண்ணொருவர், தனது கணவரும் இறுதி யுத்தத்தில் சரணடைந்து பூசா தடுப்பு முகாமில் உள்ளதால், தனது கணவர் விடுதலையாகி வரும்மட்டும், தனது இரு பிள்ளைகளை தான் பராமரிக்க முடியாமல் கஷ்டபடுவதாக கூறி, சுயதொழில் செய்வதற்கு, புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளிடம் தனக்கு உதவி பெற்று தருமாறு எதிரி இணையத்தள நிர்வாகியிடம் கடந்த 2011/09/21 அன்று கேட்டுள்ளார்.
அதற்கு எதிரி இணையத்தள நிர்வாகி, கிழக்கு மாகாணத்தில் இருப்பவர்கள் எல்லாம் துரோகிகள், கள்வர்கள். அதனால் வடமாகாணத்தில் யுத்தத்தில் பாதிப்புற்று இருப்பவர்களுக்கு மட்டுமே தம்மால் உதவி செய்ய முடியுமென கூறியுள்ளார்.
இந்த எதிரி இணையத்தள நிர்வாகியின் நையாண்டி தனத்துக்கு காலம்தான் பதில் சொல்லும்.
நன்றி
Contact No : 0094 775111960
0 comments :
Post a Comment