Saturday, September 17, 2011

ஐ.தே.க செயற்குழுவிலிருந்து மொஹமட் மஹ்ரூப் நீக்கம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான மொஹமட் மஹ்ரூப் கட்சியின் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

மஹ்ரூப்பை கட்சியின் செயற்குழு உறுப்பினராக தொடர்ந்தும் கருத முடியாது என தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் மஹ்ரூபிற்கு எழுத்து மூலம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ரணில் விக்ரமசிங்கவை மஹ்ரூப் கடுமையாக விமர்சனம் செய்திருந்ததுடன் ரணில் விக்ரமசிங்கவை நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு அழைத்து சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment