Monday, September 5, 2011

புலனாய்வு பிரிவு நிலையப் பொறுப்பதிகாரியை உடனடியாக கைது செய்க- நீதவான்

சிறுமியொருவர் துஷ்பிரயோக த்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் சாட்சியாளரிடமிருந்து பலவந்தமமாக கடிதம் ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சித்ததார் என்ற குற்றச்சாட்டுக்கு அமைய கெப்பிதிகொல்லாவ பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியை உடனடியாக கைது செய்யுமாறு கெப்பிதிகொல்லாவ நீதவானும் மாவட்ட நிதிபதியுமான திலினி கமகே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கெப்பிதிகொல்லாவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பலவந்தமமாக கடிதம் ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சித்ததாக முறைப்பாட்டாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் அதில் தொடர்பு பட்டிருக்கவில்லை என குறித்த கடிதத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக முறைப்பாட்டாளர் தரப்பால் நீதிமன்றத்தால் கூறப்பட்டது.

குறித்த கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுடன் அது தொடரபிலான விடயங்களை ஆராய்ந்து பார்த்து கெப்பிதிகொல்லாவ பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரிய உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வடமத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்கருக்கு நீதவான் உத்தரவிட்டார்.



No comments:

Post a Comment