தூக்குக்கு பதிலாக சாகும்வரை சிறை தண்டனை விதிக்கவேண்டும் மணிசங்கர் அய்யர்
ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனைக்கு பதில் சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அயயர் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தால் அவர்கள் விடுதலையாகி வெளியே வந்து மீண்டும் ஒரு முதல்வரையோ, பிரதமரையோ கொலை செய்யவும் வாய்ப்புள்ளது. எனவே, ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சாகும் வரை சிறையில் அடைக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
அத்துடன் அஜ்மல் கசாப்பையும் தூக்கில் போடாமல், சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்.
0 comments :
Post a Comment