பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க கோரும் விண்ணப்ப ம் இன்று ஐ.நா வில்.
பாலஸ்தீன அரசுக்கு தனி நாடு அந்தஸ்து வழப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அபாஸ், தமது நாடு ஐநாவில் முழு உறுப்பு நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் முன் வைத்துள்ளார். அதற்கான விண்ணப்பக் கடிதத்தை ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூனிடம் அபாஸ் ஒப்படைத்தும் உள்ளார்.
அது குறித்து ஐநா உறுப்பு நாடுகள் இன்று விவாதிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விவகாரம் குறித்த விவாதம் பல வாரங்கள் நீடிக்கக்கூடும் என்று ஐநாவுக்கான லெபனானியத் தூதர் நவாஃப் சலாம் கூறியுள்ளார்.
பாலஸ்தீன அதிபரின் இந்த விண்ணப்ப மனு குறித்து ஐநா உறுப்பு நாடுகளிடம் வாக்களிப்பு நடத்தப்பட்டால் தமது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி அந்த மனுவை நிராகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்தியா, ரஷ்யா, சீனா பிரேசில் ஆகிய நாடுகள் பாலஸ்தீனர் களின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் அவற்றின் முடிவு களை இன்னும் தெரிவிக்க வில்லை.
இந்நிலையில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒரு மாதத்திற்குள் அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
0 comments :
Post a Comment