Monday, September 5, 2011

செயற்கை அவயங்களை பொருத்தும் புனர்வாழ்வு முகாம் யாழில்.

உள்நாட்டு போரின்போது தமது உடல் அவயங்களை இழந்த மக்களுக்கு உதவும் முகாமாக குறைந்த செலவில் செயற்கை அவயங்களை பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இரண்டாவது புனர்வாழ்வு முகாம் வடமாகாண ஆளுநர் சந்தசிறயினால் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.


இலங்கையில் இரண்டாவது தடவையாக ஒழுங்குபடுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முகாமில் செயற்கை அவயங்களை பொருத்தக்கூடிய 20 தொழில்நுட்பவியலாளர்களை கொண்ட குழு செயற்படுகின்றது.

தற்போது நடைபெற்று வரும் இம்முகாமின் தொழில்நுட்பவியலாளர்கள் குழுவில் மாற்று வலுவுள்ளவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட இந்திய துணைத் தூதுவர். வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டனித் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com