Saturday, September 10, 2011

பிபிசி செய்தியாளரைக் கொன்றது அமெரிக்க சிப்பாய்கள்

ஆப்கானிஸ்தானில் பிபிசி செய்தியாளர் ஒமைத் ஃபுல்வாக்கை தாமே சுட்டுக் கொன்றதை அந்நாட்டிலுள்ள அமெரிக்கப் படையினர் ஒப்புக்கொண்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரி என நினைத்து தவறுதலாக இவரை சுட்டுக் கொன்றதாக அவரது கொலை தொடர்பில் இராணுவத்தினர் நடத்தியிருந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய விடயங்கள்வன்முறை, தாக்குதல் உருஸ்கான் மாகாணத்தில் கடந்த ஜூலையில் ஆப்கானிய தொலைக்காட்சி ஒன்றுக்கு சொந்தமான அலுவலகத்துக்குள் அமெரிக்கப் படையினர் அதிரடியாக நுழைந்திருந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்திருந்தது.

அந்தக் கட்டிடத்துக்குள் தாலிபான்கள் நுழைந்திருந்ததை அடுத்து அமெரிக்கப் படையினர் அக்கட்டிடத்துக்குள் நுழைந்திருந்தனர்.

"அந்த இளைஞர் ஒரு கையில் ஏதோ எலக்டிரானிக் கருவியை வைத்திருந்தார். இன்னொரு கையால் தனது சட்டை பையை அவர் எட்ட முயன்றார். அவரது செயல்களைக் கண்ட சிப்பாய்கள் அவரும் ஒரு தற்கொலை குண்டுதாரியோ என நினைத்து சுட்டுவிட்டனர்."

அமெரிக்க இராணுவ அதிகாரி

அச்சம் அந்தக் கட்டிடத்தில் ஒரு குளியலறையில் ஒளிந்திருந்த ஒமைத் ஃபுல்வாக்கைக் எதிர்கொண்ட அமெரிக்கச் சிப்பாய்கள், ஒரு கையில் அவர் எலக்டிரானிக் கருவி ஒன்றை வைத்திருந்ததையும், மறு கையால் தனது சட்டைப் பையை எட்ட முயன்றதையும் கண்டுஅவரைச் சுட்டுவிட்டனர்.

ஆனால் இவர் தனது கையில் வைத்திருந்தது கைத்தொலைபேசி என்றும், தனது ஊடகவியலாளர் அடையாள அட்டையை எடுப்பதற்காக அவர் தனது சட்டைப் பையில் கையை நுழைத்திருந்தார் என்பதும் பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஃபுல்வாக்கின் குடும்பத்தினரும், பிபிசியும் அழுத்தம் தந்திருந்ததன் விளைவாக அவரது மரணம் தொடர்பாக விசாரணை ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

பிரபலமான செய்தியாளர்

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் பிராந்தியத்துக்கு வடக்கே அமைந்துள்ள மலைப்பாங்கான உருஸ்கான் மாகாணத்தில் ஃபுல்வாக் பிரபலமானவர்.

ஆப்கானிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளர் இவர். தவிர இவரது குரல் பிபிசியிலும் ஒலித்துவந்தது.

ஜூலை 28 அன்று அவர் வேலைபார்த்து வந்த அலுவலகத்தின் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அவர்கள் மீது அங்கு வந்த அமெரிக்கப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

நடந்தது என்ன?

"அமெரிக்கப் படையினர் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்தபோது இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தம் மீது கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்து கட்டிடத்தின் சில பகுதிகள் இடியச் செய்தனர். அமெரிக்க சிப்பாய்கள் கட்டிடத்தின் மற்ற பாகங்களுக்கு சென்று வேறு ஆயுததாரிகள் இருக்கிறார்களா என்று தேடியபோது, பக்கத்து அறையில் நின்றிருந்த இந்த இளைஞர் கையில் ஏதோ எலக்டிரானிக் கருவியை வைத்திருந்தார். இன்னொரு கையால் தனது சட்டை பையை அவர் எட்ட முயன்றார். அவரது செயல்களைக் கண்ட சிப்பாய்கள் அவரும் ஒரு தற்கொலை குண்டுதாரியோ என நினைத்து சுட்டுவிட்டனர்." என ஆப்கானில் உள்ள அமெரிக்க படையைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் ஜேக்கப்சன் தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் அந்த ஊரில் பல்வேறு இலக்குகளை அன்று தாக்கியிருந்தனர். ஆப்கானியப் பொதுமக்கள் மொத்தம் 18 பேர் அன்று கொல்லப்பட்டிருந்தனர். அன்று நடந்த சண்டைகளில் அமெரிக்கச் சிப்பாய்கள் எட்டு பேர் காயம் அடைந்திருந்தனர்.

பிபிசி உயர் அதிகாரி கருத்து

ஒமைத் கொல்லப்பட்டது ஒரு பெரிய துயர நிகழ்வு என்று பிபிசியின் உலக செய்திப் பிரிவின் இயக்குநர் பீட்டர் ஹாரக்ஸ் கூறினார்.

உலகெங்கிலும் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் உயிரையே பணயம் வைக்க வேண்டியுள்ளது, பெரும்ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து செயலாற்றும் பத்திரிகையாளர்களுக்கு முடிந்த அளவுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கப்படுதல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

நன்றி பிபிசி

1 comments :

Anonymous ,  September 10, 2011 at 5:25 PM  

English proverb says that "King do no wrong".We are helpless and we are compelled to forget it.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com