Tuesday, September 13, 2011

இந்தியா அமெரிக்கா மீண்டும் பிரிவினைவாத போராட்டம்களை உருவாக்க முயற்சி!!

அமைதியின்மையை ஏற்படுத்தவே பிளேக் வருகை என்கிறார் விமல்.
இந்தியாவும் அமெரிக்காவும் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதப் போராட்டம்களை உருவாக்க முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளன. இதற்காக நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தவும், போராட்டம்களுக்கு தேவையான புறச்சூழலை அமைக்கவுமே தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இலங்கை வந்துள்ளார் என்று அமைச்சர் விமல் வீரவம்ச தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அமெரிக்கா, இந்தியா உட்பட மேற்குலக நாடுகளின் தற்போதய அவசர தேவையானது இலங்கையில் அதிகாரப்பகிர்வின் ஊடாக பிரிவினைவாதக் கட்சிகளுக்கு உயிரூட்டுவதேயாகும்.

இதற்கான முயற்ச்சிகள் தேசிய அரசியலில் சூழ்ச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி தலையீடுகளுக்கான சூழலை ஏற்படுத்துவது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் திட்டமாகும்.

இதுவரை காலமும் இலங்கை வந்த அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் உள்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசியது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை வந்துள்ள ரொபட் ஓ பிளேக்கின் நிகழ்ச்சி நிரலில் மாணவர்களின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது வேறொன்றுக்கும் இல்லை. மாணவர்களை கொண்டு அரசிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல்களை ஏற்படுத்துவதாகும்.

ஐ.நாவின் தேவையும் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிப்பதாகும். ஐ.நா வின் தலைமை அதிகாரியான கிறிஸ்டோப் ஹெய்ன் லிபியாவைப் போன்ற தலையீடு இலங்கைக்கும் அவசியம் என கூறியிருந்தார். இதுவே இன்று நாட்டிற்கு எதிரான சூழ்ச்சியாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

1 comments :

Anonymous ,  September 13, 2011 at 3:51 PM  

United Srilanka is the best solution to save the sovereignity of the country.A disunited nation will make more opportunites for the strangers to gain more advantage over the country.Unity is strength.Make Srilanka as safe haven and not a saggy mattress.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com