Monday, September 5, 2011

இலங்கை மீதான மேற்குலக அழுத்தங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்தது வந்ததாம்.

இலங்கை மீது மேற்குலக நாடுகள் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வந்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டள்ளது. குறிப்பாக இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் சுமத்திய மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இந்தியா மிகவும் கவனமாக கண்காணித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை, சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் கட்டுப்பட்டு விடுமோ என இந்தியா அதிக கரிசனை கொண்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை மீது சர்வதேச நாடுகள் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் சீன மற்றும் ஈரான் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்ச்சைகளுக்கும் வழிகோலும் என இந்தியா கருதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியில் தீர்வுக் காணப்பட வேண்டும் எனவும், தேர்தல்களை வரவேற்பதாகவும் இந்தியா அறிவித்திருந்தது.

சீனாவின் ஒத்துழைப்பு இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்ட உதவியாக அமையாது என இந்தியா கருதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குவதனை இந்தியா விரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி திருமூர்த்தி என்பவருக்கும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கும் இடையில் நடைபெற்ற கருத்துப் பரிமாறல்களின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1 comments :

Anonymous ,  September 6, 2011 at 6:13 AM  

Geopolitical oppotunism plays an
important role around the world.The
practice of using situations unfairly
to gain advantage for themselves.United Srilanka is the only solution to keep the country unswerving

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com