Wednesday, September 14, 2011

ரணில் விக்ரமசிங்க ஒரு முஸ்லிம் துரோகியாம்! சொல்கிறார் மொகமட் மஹ்ரூப்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுபபினர் மொகமட் மஹ்ரூப் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொண்ட பிறகு நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, வெட்கமில்லாத தலைவர் எனக்கு செய்த பொய் வாக்கறுதியின் காரணமாக அன்று எனக்கு தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி வந்தது. இதன் காரணமாக எமது ஜனாதிபதி மேற்கொண்டு வரும் நல்ல வேலைத் திட்டங்குளுக்கு கொழும்பு மத்திய தொகுதியின் பலத்தை வழங்க நாங்கள் ஜனாதிபதியுடன் ஒன்றுபட்டுள்ளோம்.

1987 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது எமது கட்சியை சேர்ந்த ஏழு பேர் மரணமடைந்தார்கள். இதன் பிறகு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார். அன்று எனது வீட்டில் வைத்து அவரின் தேர்தல் பிரசார வேலைகளுக்காக 500 மில்லியன் ரூபாவை வழங்கினேன். அது போல் அடுத்து வந்த தேர்தலின் போதும் அவரது தேர்தல் பிரசார வேலைகளுக்காக 500 மில்லியன் ரூபாவை கொடுத்தேன்.
நான் 1000 மில்லியன் ரூபாவை கொடுத்த போதும் அவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பணத்தை மலிக் விக்ரமசிங்க என்னிடம் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் நான் மத்திய கொழும்பின் அமைப்பாளரானேன்.
அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அன்று ஹேமா பிரேமதாசவின் வங்கிக் கணக்கிலிருந்த ஐந்து மில்லியன் ரூபா பணத்தையும் எனது பொருளாளர் குழுவினரிடம் கேட்டு அந்த பணத்தை பெற்று ரணில் விக்ரமசிங்கவிடம் கொடுத்தேன்.

இவ்வாறு உண்மையான வேலைகளையே ஐக்கிய தேசியக் கட்சிக்கு நானும் நீங்களும் செய்தோம். அவரிடம் நாங்கள் எதனையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் எந்தவொரு திருமண வீட்டிற்கோ மரண வீட்டிற்கோ வந்ததில்லை. மத்திய கொழும்பிற்கு எந்தவொன்றையும் அவர் செய்தது கிடையாது. எங்களது கட்சி அதன் காரணமாகவே வீழ்ச்சி அடைந்தது.

அன்று மத்திய கொழும்பிற்கு முஸ்லிம் வேட்பாளர்கள் இருவரையே தேர்தலில் நிறுத்துவார்கள். ஆனால் இறுதியாக நடத்தப்பட்ட தேர்தலின் போது கட்சியின் பொதுச் செயலாளருக்கு யாரோ ஒரு கசினோ சூதாட்டக்காரர் புரியாணி சாப்பாட்டுச் 'சஹான்' ஒன்றை கொடுத்துள்ளார். அதன் காரணமாக புரியாணி கொடுத்த மூன்றாவது நபரும் தேர்தலில் நிறுத்தப்பட்டார்.

முஸ்லிம்கள் மூவரை நிறுத்தினால் ஒருவரும் வெற்றி பெறமாட்டார்கள் என்று அன்று நான் கூறினேன். இறுதியில் அந்த தேர்தலில் எவரும் வெற்றி பெறவில்லை. தேசியப்பட்டியல் எம்.பி. பதவி பணத்திற்காக விற்கப்பட்டது.

நான் சவால் விடும் மனிதன் அல்ல. ஆனால் ரணில் விக்ரமசிங்கவை என்னுடன் எந்தவொரு தொலைக் காட்சி அலைவரிசையிலும் விவாதத்திற்கு வருமாறு சவால் விடுகிறேன். ரணில் விக்ரமசிங்க ஒரு முஸ்லிம் துரோகி ஆவார்.

நான் பிரேமதாசவிடம் மக்களுக்கு சேவை செய்ய கற்றுக் கொண்டேன். ஆனால் ரணில் விக்ரமசிங்கவிடம் ' டிபெக்ஸ் இடுவதற்குக் கற்றுக் கொண்டேன் என்று நான் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

No comments:

Post a Comment