தமிழ் சிங்கள் நட்புறவை ஏற்படுத்த கண்டியில் இரத்ததானம்
இலங்கை இந்து சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் சிங்கள தமிழ் நட்புறவைக் கட்டி எழுப்பும் நோக்கில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு கண்டி பிரதான வைத்தியசாலையில் அமைந்துள்ள இரத்த வங்கி நிலையத்தில் உத்தியோகபூர்வமாக தெல்தோட்டை மலைமகள் பாடசாலை ஆசிரியரும் இந்து சேவா சங்கத்தின் முக்கிய அதிகாரியுமான அருண்காந்த் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கலந்துகொண்ட கண்டி பொலிஸ் நிலையத்தின் பொதுசனத் தொடர்புப்கான பொறுப்பதிகாரி ஐ. பி. சுபசிங்க இங்கு உரையாற்றும் போது
இரத்த தானம் வழங்குவது என்பது மற்றுமொரு மனித உயிர் வாழ்வுக்கு உதவி செய்வதாகும். இவ்வாறான நல்ல காரியங்கள் செய்வதன் மூலமாக நமக்கிடையே மிக நெருக்கமான உறவு ஏற்படும். ஆது மாத்திரமல்ல இரத்த தானங்கள் கூடுதலாக அந்தந்த பிரதேசங்களுக்குச் சென்றுதான் சேகரிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் இங்கே விசேடமாக மிகுந்து தூரத்தில் இருந்து வருகை தந்து இரத்த தானம் வழங்குவது என்பது இதுவே முதற் தடவையாக இருக்கலாம் எனக் கருதுகிறேன் இந்த முயற்சிப் பாராட்டக் கூடிய விடயம். இது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அவர் அங்கு தெரிவித்தார்.
பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ. பீ. சுபசிங்க தொடர்ந்து அங்கு பேசுகையில்
நல்ல காரியங்களை நாங்கள் ஒன்று பட்டு செய்யும் போது சமூகங்களுக்கிடையே ஒற்றுமை புரிந்துணர்வு பரஸ்பர நல்லெண்ணம் ஏற்பட வழி பிறக்கும் நாட்டில் மறுமலர்ச்சி சுவிட்சம் ஏற்படும் எனவே இவ்வாறு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இவ்வாறு நல்ல காரியங்களை மனித சமூகத்திற்கு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்
இந்நிகழ்வில் இந்து சேவா சங்கத்தின் இந்தியாவுக்கான வதிவிடப் பிரதிநிதி ஸ்ரீ இராதாகிருஷ்ணன் ஜீ, கண்டி வர்த்தக சங்கத்தின் பொருளாளர் பழனியப்பன், இந்து சேவா இரத்த வங்கி நிலையத்தின் வைத்திய அதிகாரிகள் இந்து சேவா சங்கத்தின் முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பாசடாலை மாணவர்கள் உட்பட பெருந்தொகையான பெருந்தோட்டத் துறை சார்ந்த இளைஞர் யுவதிகள் இரத்த தானம் வழங்கினர்.
இக்பால் அலி
0 comments :
Post a Comment