Sunday, September 4, 2011

கிறீஸ் பூதத்தின் பின்னணியில் தமிழ் முஸ்லிம் பிரிவினவாதக் குழுக்களாம்.

கிறீஸ் பூதங்கள் என்ற போர்வையில் அடிப்படைவாத குழுக்கள் இரண்டு மீண்டும் இனப் பிரச்சினையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் முஸ்லிம் மற்றும் தமிழ் இனங்களைச் சேர்ந்த இந்த அடிப்படைவாத குழுக்களில் ஜிஹாத் மற்றும் புலிகள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது எனவும் சிங்கள ஊடகம் ஒன்றின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஹாத் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் உதவி கிடைப்பதாக தெரிய வந்துள்ளது எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மையில் கிண்ணியாவிலும் அக்கறைப்பற்றிலும் புத்தளத்திலும் ஏற்பட்ட சம்பவங்கள் ஜிஹாத் இயக்கத்தவர்களினூடாக செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளடைய தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அந்த தமிழ் இயக்கத்தின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படாததற்கு எதிராக அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்hடும் வகையில் இந்த அரசியல் கட்சி கிறீஸ் பூதங்களை ஆட்டுவிக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புத்தளத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்படுலதற்கு பிரபல அரசியல்வாதி ஒருவருடைய ஆதரவாளர்கள் சிலர் தொடர்பு பட்டிருப்பதாகவும் வடக்கில் இது போன்றதொரு சம்பவம் ஏற்பட்டபோது அதன் பின்னணயில் முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த குழுக்களின் நோக்கம் வடக்கு கிழக்கில் இன ரீதியான பிரச்சினைகளை ஆரம்பிப்பதாகும். இலங்கையில் இனிமேல் அரசாங்க விரோத செயல்களை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜிஹாத் இயக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்று மேற்குலக ஒற்றர் சேவை மூலமாக மேலைத்தேய புலனாய்வுப் பிரிவினர்க்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இலங்கை புலனாய்வுப் பிரிவினர்க்குத் தெரிய வந்துள்ளது.

2 comments :

Anonymous ,  September 4, 2011 at 8:07 PM  

It's not a hard matter to the present government to finish up this matter within a second.This serious situation could damage the good reputation of the government.We feel that we have extremely unpleasant and an evil smell.We urge the government and the senior officers of the repective provinces ,police and military to look for the force
that causes wicked or bad things happening which are the biggest threat to the poor citizens.They need a permanent peaceful life and not a violent one.

Anonymous ,  September 6, 2011 at 8:20 AM  

If the government can destroy LTTE,why not the crease-devils.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com