Saturday, September 10, 2011

இலங்கையின் ஊடகங்களை விலைக்கு வாங்க 'ரோ' முயற்சி.

இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் மக்களின் அபிப்பிராயத்தை தயார்படுத்துவதற்காக இந்தியா தனது பிரதான உளவு சேவையான ''ரோ' மூலமாக இலங்கையின் ஊடக நிறுவனங்களை விலைக்கு வாங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் செய்திகளையும் விஷேட நிகழ்ச்சிகளையும் குறுந் திரைப்படங்களையும் பிரசாரம் செய்வதற்கு இந்த உளவ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக கடந்த காலங்களில் இலங்கையில் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக இதனை செயற்படுத்த்த் திட்டமிடப்பட்டுள்ளதாகவம் தெரிய வந்துள்ளது.

இதுவரை குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்று செய்திகள் மற்றும் விஷேட நிகழ்ச்சிகளை அந்த ஊடகம் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளதாகவும், அந்த ஊடகத்தினூடாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் பல இந்தியாவில் உள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்றினூடாகவே தயாரிக்கப்படுவது தெரிய வந்துள்ளதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது.

விரைவில் ஆரம்பிக்கவுள்ள செய்திப் பத்திரிகை ஒன்றையும் இந்த விடயத்திற்கு பயன்படுத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அந்த உளவு நிறுவனம் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  September 11, 2011 at 7:00 PM  

Freedom of media is the keystone of a genuine democracy.It should not change its policies at any circumstances.If it is in the hands of certain institutions or under certain people,there is no point trusting it,after they are the propaganda machines of their masters.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com