பாதுகாப்பு அமைச்சிடம் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை வழங்க கடும் எதிர்ப்பு.
பல்கலைக் கழகங்களின் பாதுகாப்புத் தொடர்பான பொறுப்பை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு வழங்குவதற்குகடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக ஐந்து பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 51 விரிவுரையாளர்களைக் கொண்ட குழுவொன்று தெரிவித்துள்ளது.
டென்டர் விடுக்கப்படாமல் பாதுகாப்பு அமைச்சினால் நிருவகிக்கப்படும் நிறுவனமொன்றுக்கு பல்கலைக் கழகங்களின் பாதுகாப்புத் தொடர்பான பொறுப்பை ஒப்படைப்பதன் மூலமாக பல்கலைக் கழகங்களின் சுதந்திரத்தன்மை இல்லாமற் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் முலம் பல்கலைக் கழகங்களின் செயற்பாடுகளுக்கும் கல்வியலாளர்களின் சுதந்திரத்திற்கும் இடையுறு ஏற்படும் என்று பேராதனை, கொழும்பு, மொரட்டுவ, கிழக்கு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அந்த விரிவுரையாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment