புலி மாஸ்ரர்கள் இருவர் மீதான வழக்கு மேலும் ஒத்திவைக்கப்பட்டது.
புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த வழக்கை 2012 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரை கொழும்பு மஜிஸ்ட்ரேட் சிங்கப்புலி ஒத்திவைத்தார்.
இவர்கள் இருவர் தொடர்பாகவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கம் மன்றில் தெரிவித்தது.
2009 ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி சந்தேக நபர்கள் இருவரும் ஓமந்தை பொலிஸாரிடம் சரணடைந்த பிறகு மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment