தொடர்ந்து தோல்வி அடையும் யுகத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். சஜித்
தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடையும் யுகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு காலம் வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு உயர்ந்தபட்ச திறமை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின முன்னாள் தலைவர்கள் கட்சியை புனரமைப்பு செய்யப்பட வேண்டிய விதம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment