யாழில் ஏழு பொலிஸார் இடைநிறுத்தம்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு சார்ஜன்ட்களும் 5 கொஸ்தாபல்களுமாக 7பேர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். வழக்கு ஒன்றிற்காக பிடியாணை விடுக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாருக்கு தெரியாமல் சட்டத்தரணியூடாக யாழ் நீதி மன்றில் சரணடையவிருந்தபோது அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யபட்டதாக அறிய முடிகின்றது.
குறித்த சந்தேச நபர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே சென்றபோது நீதி மன்றுக்கு வெளியே வைத்து குறிப்பிட்ட அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணி மன்றில் முறையிட்டதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment