அரசாங்கம் மக்களை குப்பையாக கருதுகிறது. ரணில் விக்கிரம சிங்க
அரசு மக்களை குப்பையாக கருதுகிறது. இந்நிலை தொடர வேண்டுமா? நாங்கள் இலங்கைப் பிரஜைகள் என்று எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் ஒன்றுபட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை ராமகிருஷ்ணன் வீதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
ரணில்விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, யுத்தத்தின் போது பல உயிர்கள் பலியாகின. இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டது. எங்கள் எல்லோருக்கும் தெரியும் யுத்தத்தின் காரணமாக ஒரு இலட்சம் வீடுகள் நாசப்படுத்;தப்பட்டன இந்த
எண்ணிக்கையோடு கொழும்பிலும் 65 ஆயிரம் வீடுகள் உடைத்து நாசப்பட்த்தப்பட்டன. ஆப்படியானால் ஒருலட்சத்து 65ஆயிரம் வீடுகளாக நாசப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது .
தேர்தலில் வாக்களித்து இதற்கு நாங்கள் அனுமதி வழங்க வேண்டுமா? என்றார்.
0 comments :
Post a Comment