Wednesday, September 28, 2011

காதலனுட‌ன் செ‌ன்றா‌ர் ‌வீரப்பன் மக‌‌ள்.


காத‌‌ல் கணவருட‌ன் செ‌ல்ல ச‌ந்த‌ன கட‌த்த‌ல் ‌வீர‌ப்ப‌ன் மக‌‌ளு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது. வீரப்பன்- முத்துலட்சுமி‌க்கு வித்யாராணி, பிரபா எ‌ன்ற இர‌ண்டு மகள்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன‌ர். இ‌தி‌ல் வித்யாராணி சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து வந்தார். அ‌ப்போது பெரம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மரிய தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இத‌னிடையே, தனது மனைவி வித்யாரா‌‌ணியை அவரது தாயார் முத்துலட்சுமி சட்ட விரோத காவலில் தடுத்து வைத்திருப்பதாகவு‌ம், மனை‌வியை‌ ‌மீ‌ட்டு‌த் தரு‌ம்படியு‌ம் ம‌ரிய‌ ‌தீப‌க் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆ‌ட்கொண‌ர்வு மனு‌த் தா‌க்‌க‌ல் செ‌ய்தா‌ர்.

அ‌ந்த மனு‌வி‌ல், லயோலா கல்லூரியில் நா‌ன் படித்த போது வித்யாராணியுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் இர‌ண்டரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டோம். கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 26ஆ‌ம் தேதி பதிவு செய்தோம். அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்‌ட் மாதம் எனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி மேட்டூர் மேச்சேரியில் உள்ள வீரப்பன் சமாதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றார். அதன் பிறகு வித்யாராணியை என்னுடன் அனுப்ப முத்துலட்சுமி மறுத்து விட்டார். நாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் எங்களை பிரிக்க முத்துலட்சுமி முயற்சி செய்கிறார்.

எனவே எனது மனைவியை மீட்டு தரும்படி கடந்த ஆகஸ்‌ட் 29ஆ‌ம் தேதி சென்னை காவ‌ல்துறை ஆணைய‌ரி‌ட‌ம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே முத்து லட்சுமியின் சட்ட விரோத காவலில் இருந்து வரும் என் மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைக்கும்படி செம்பியம் காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் ம‌ரிய‌ம் ‌தீப‌க் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த வழ‌க்கு நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வித்யாராணியை நீதிபதிகள் முன் ஆஜர்படுத்த‌ப்ப‌ட்டா‌ர்.

அ‌ப்போது, வித்யாவை அழைத்து பே‌சிய ‌‌நீ‌திப‌திக‌ள், நீ யாருடன் வாழ ஆசைப்படுகிறாய்? என்று கேட்டனர். அதற்கு, கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று ‌வி‌த்யாரா‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதையடுத்து நீதிபதிகள் ‌பிற‌ப்‌பி‌த்த உ‌த்தர‌வி‌ல், வித்யாராணி மேஜரான பெண். அவர் சட்டப்படி தீபக்கை திருமணம் செய்துள்ளார். அவர் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே வித்யா கணவர் தீபக்குடன், சேர்ந்து வாழ அனுமதி அளிக்கிறோம் என்றன‌ர்.

‌‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌த்த‌த்தை தொட‌ர்‌ந்து காத‌ல் மனை‌வி ‌வி‌த்யாராண‌ியை காத‌ல் கணவ‌ர் ம‌ரிய ‌தீப‌க் அழை‌‌த்து செ‌ன்றா‌ர்.

நன்றி வெப்துனியா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com