குருநாகலில் தமிழர் பயமின்றி வாழவேண்டு- மானால் இ.தொ.கா விற்கு வாக்களிக்கட்டாம்.
குருநாகலில் வாழும் தமிழ் மக்கள் அச்சம் பயமின்றி மானத்துடன் வாழ வேண்டுமேனில் இம்முறை உள்ளுராட்சி மன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள இ. தொ. காங்கிரஸ் சார்ப்பான பிரதிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கால் நடை சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.
குருநாகல் மாநகர சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இ. தொ. காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்ள்ள வேட்பாளா தியாகராஜாவை ஆதரித்து கல்லெல என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம் நாட்டு மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்களோ அவ்வாறே தோட்ட மக்களும் சகல வசதிகளுடன் வாழ வேண்டும் என்ற எண்ணப்பாங்கைக் கொண்டவர் அதேபோல் ஆளும் தரப்பு அமைச்சர்களும் தேவையான உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறார்கள்.
குருநாகல் நகரைப் பொறுத்தவரை நுவரெலியா பதுளை , மலையகம் போன்று எண்ணி விடக் கூடாது. தேர்தல் இறுதிக் காலங்களில் நிறையப் பொருட்கள் உங்கள்காலடியில் நாடி வரும். அதற்கெல்லாம்நீங்கள் மயங்கி விடாதீர்கள.;
உங்கள் அயலில் உள்ள பன்விலை பிரதேசக்கு பிரதேச சபைத் தலைவராக இ. தொ. காங்கிரஸ் பிரதி ஒருவர்தான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது போல் பல பிரதிநிதிகள் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர் அதிகப் படியான வாக்குகளைப் பெற்றதனால் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கே அவ்வாறு பெற முடியும். அந்தப் பன்விலை பிரதேச சபைக்கு ஆறு மாதங்களாகின்றன. அங்கு நான் ஆறு கோடி ரூபா நிதி வழங்கியுள்ளேன். தம் சமூகத்தின் நன் நோக்கம் கருதி இங்கு தம் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள் இங்கு நீங்கள் முன்வைத்த கோரிக்களை விட பெருந்தொகையான உதவிகளைச் செய்யவுள்ளேன் என்று அமைச்சர் தொண்டமான் அங்கு மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் , மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து சமய கலாசார அமைச்ர் அனுசியா சிவராசா மத்திய மாகாண சபை உறுப்பினர் ராம் மற்றும் இ. தொ. காங்கிரஸ் அதிமுக்கியஸ்தர்களான மதியுகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி
0 comments :
Post a Comment