பான் கீ மூனின் 'மரபு மீறிய செயல்' கடும் தொனியில் கடிதம் எழுத ஹோகனவுக்கு அறிவுறுத்தல்
ஐ.நா.செயலாளர் பான்.கீ மூன் அரசாங்கத்துடனான அடிப்படை இராஜதந்திர முறைகளுக்கு முற்றிலும் முரணான ரீதியில் நடந்து கொண்டதை கண்டிக்கும் வகையில் மூனுக்கு எதிராக கடுமையான கடிதம் ஒன்றை அனுப்பி வைக்குமாறு ஐ.நா.வுக்கான இலங்கை நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித ஹொகனவுக்கு அரசாங்கம் பணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களை ஆதாரம்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கு முன்கூட்டியே அறிவிக்காத வகையில் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்த விவகாரம் தொடர்பில் பான் கீ மூனை அரசாங்கம் வெகுவாக சாடியுள்ளது. ஜெனிவாவுக்கு மேற்படி அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டமை எம்மை வெகுவாக ஏமாற்றமடைய செய்துள்ளது இதேவேளை மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை என்பவற்றையும் இலங்கை சாடியுள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதனை சர்வதேச சமூகமே தீர்மானிக்கும் என பகிரங்கமாக தெரிவித்திருந்த பான் கீ மூன் , தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது மரபு மீறிய செயலாகவே அமைந்துள்ளது என இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment