இந்தியா சீனா ரஷ்யா சபையில் பாரிய ஒத்துழைப்பு வழங்கின. சிறிபால டீ சில்வா
அண்மையில் இடம்பெற்ற ஐ.நா வின் மனித உரிமை கவுண்சிலில் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சபையில் தாம் இலங்கையின் நிலவரங்கள் தொடர்பாக தெளிவாக உறுப்பு நாடுகளுக்கு விளக்கியதாகவும் இதன்போது தமக்கு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய சாடுகள் பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலில் அங்கத்துவம் கொண்ட நாடுகளுக்கு இலங்கையின் மனித உரிமை நடவடிக்கை குறித்து பொதுவாக தெளிவுபடுத்தியதாக தெரிவித்துள்ள அமைச்சர் மேலும் இதுவிடயமாக சந்தேகம் கொண்ட நாடுகளுக்கு தனித்தனியே தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கில் உள்ள நிலைப்பாட்டினை யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் உதவியுடன் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தருஸ்மன் அறிக்கை மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் முன்வைக்க எதுவித தீர்மானங்களும் அங்கு காணப்படவில்லை எனவும் அவ்வாறு முன்வைக்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment