Friday, September 9, 2011

வட-கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது ஆபத்தானதாம்

பயங்கரவாத அச்சுறுத்தல் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படாத நிலையில் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தற்போதைக்கு பொருத்தமில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உரிய நேரத்தில் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் காணி அதிகாரங்களை வழங்குவதில் தவறில்லை எனவும் ஐக்கிய இலங்கைக்குள் காணி அதிகாரங்களை பகிர்வதில் எந்தவிதமான தவறையும் தாம் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பான இலங்கைத் தமிழரசு கட்சியின் கோரிக்கைக்கு கிழக்கு மக்களே தீர்வு வழங்க வேண்டும் எனவும் 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது எனவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment